மதுரை விமான நிலையத்திலிருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் துணை குடியரசுத் தலைவர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு தேவர் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்துவதற்காக நேற்று மாலை ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தார் துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், தொடர்ந்து இன்று காலை மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்று அங்கு தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் வந்து இங்கிருந்து மீண்டும் ராணுவ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
Tags : மதுரை விமான நிலையத்திலிருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் துணை குடியரசுத் தலைவர்.


















