பள்ளி கழிவறையில் உயிரிழந்து கிடந்த மாணவன்

by Staff / 26-02-2025 03:32:40pm
பள்ளி கழிவறையில் உயிரிழந்து கிடந்த மாணவன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அரசு பள்ளி கழிவறையில் 9ஆம் வகுப்பு படிக்கும் கவின்ராஜ் என்ற மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் இறப்புக்கு காரணம் கேட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு வந்த மாணவன் வழக்கம்போல் கழிவறைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் திரும்பாததால் சக மாணவர்கள் சென்று பார்த்தபோது மயங்கி கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via