முடி வளர மூலிகை.. ஆண்களுக்கு மொட்டை அடித்த மோசடி கும்பல்

by Editor / 12-04-2025 04:07:11pm
முடி வளர மூலிகை.. ஆண்களுக்கு மொட்டை அடித்த மோசடி கும்பல்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முடி வளர மூலிகை மருந்து தருவதாகக் கூறி 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மொட்டை அடித்து மோசடி செய்யப்பட்டுள்ளது. மூலிகை தடவினால் 8 நாட்களில் முடி வளரும் என கூறி, ஒரு மொட்டைக்கு ரூ.200 கட்டணமாக வசூலித்துள்ளார். முடி வளராததால் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும், மூலிகை மருந்து பயன்படுத்திய பலருக்கும் தலையில் அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோசடி கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via