10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழிசை வாழ்த்து

by Editor / 20-06-2022 04:16:18pm
10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழிசை வாழ்த்து

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புதுச்சேரி,தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தேர்ச்சி பெறாத மாணவ,மாணவிகள் மனம் தளராமல் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும், தோல்விகள் வாழ்க்கையில் இயல்புதான், ஆகையால் எந்த விதத்திலும் முயற்சிகளை கைவிடாமல் கடின முயற்சி செய்து படித்து மறுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
 

 

Tags :

Share via

More stories

Logo