தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்விரிவாக ஆராய்ந்திட குழு.

by Editor / 05-02-2025 10:28:00am
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்விரிவாக ஆராய்ந்திட குழு.

தமிழகத்தில் தற்போது சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், "கடந்த மாதம் 24ஆம் தேதி மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பற்றி தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்விரிவாக ஆராய்ந்திட குழு.

Share via