இளைய மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை...

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் நடந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தந்தை ஒருவர் தனது மகளை பலாத்காரம் செய்த சம்பவம் தாமதமாக தெரியவந்துள்ளது. குற்றவாளியான தந்தை தனது இளைய மகளை இரண்டு வருடங்களாக பலாத்காரம் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலாத்காரம் செய்யப்பட்டதை யாரிடமும் கூறக்கூடாது என மகளை மிரட்டி வந்துள்ளார். தந்தையின் கொடுமையை தாங்க முடியாத சிறுமி இதுபற்றி தனது தாயிடம் கூறியுள்ளார். கணவர் மீது தாய் போலீசில் புகார் அளித்த நிலையில்,குற்றவாளியை கைது செய்தனர்.
Tags :