ரூ.40 லட்சம் மதிப்பில் திட்ட பணி-போக்குவரத்து துறை அமைச்சர்துவக்கிவைத்தார்.

by Editor / 01-07-2023 06:16:51pm
 ரூ.40 லட்சம் மதிப்பில் திட்ட பணி-போக்குவரத்து துறை அமைச்சர்துவக்கிவைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பணிமனையில், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தொழிலாளர் ஓய்வறை முதல் தளம் கட்டும் பணியையும், மற்றும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி பேருந்து சுத்தம் செய்யும் இயந்திரம் அமைக்கும் பணியையும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவங்கர் துவங்கி வைத்தார்.<br /> விழாவில் &nbsp;தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துறை ரவிசந்திரன்,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் &nbsp;திருநெல்வேலி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன், துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தி மு கழகத் தோழர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.<br /> &nbsp;
 

Tags :

Share via

More stories