இந்த மாதம் முதல் நெட்ஃப்ளிக்ஸ்,  டிடிஎச் உள்ளிட்ட பிற சேவைகள் வேலை செய்யாது

by Editor / 22-09-2021 03:53:06pm
இந்த மாதம் முதல் நெட்ஃப்ளிக்ஸ்,  டிடிஎச் உள்ளிட்ட பிற சேவைகள் வேலை செய்யாது

 

ஆன்லைனில் கட்டணம் செலுத்த அல்லது ரீசார்ஜ் செய்ய ஆட்டோ-பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்துவோருக்கு ஒரு முக்கிய செய்து வந்துள்ளது.. டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், யுபிஐ, அல்லது பிற ப்ரீபெய்ட் பேமெண்ட் முறைகளை பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் காரணி அங்கீகாரம் தேவைப்படும். இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது..
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த ஆட்டோ பே முறையில், பல விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் பல வங்கிகள் ஏற்கனவே இது குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கத் தொடங்கியுள்ளன.ஆட்டோ டெபிட் முறைக்கு 24 மணி நேரத்திற்கு முன், வாடிக்கையாளர்கள் ப்ரீ டெபிட் ( pre-debit) (எஸ்எம்எஸ்/மின்னஞ்சல்) அறிவிப்பைப் பெறுவார்கள். ப்ரீ டெபிட் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி அவர்கள் பரிவர்த்தனை ரத்து செய்யலாம்.. அல்லது தொடரலாம்.. அவர்கள் எந்த நிலையான அறிவுறுத்தல்களையும் மாற்றவும் ரத்து செய்யவும் முடியும்..

ஒவ்வொரு முறையும் 5,000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்துவதற்கு, பணம் செலுத்தும்போது ஒருமுறை கடவுச்சொல் (OTP) சரிபார்க்கப்பட்ட பின்னரே பணம் செலுத்த முடியும்.. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் பொருந்தும்.

ஆட்டோ டெபிட் முறைக்கு 24 மணி நேரத்திற்கு முன், வாடிக்கையாளர்கள் ப்ரீ டெபிட் ( pre-debit) அறிவிப்பைப் (எஸ்எம்எஸ்/மின்னஞ்சல்) மூலம் பெறுவார்கள். ப்ரீ டெபிட் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி அவர்கள் பரிவர்த்தனை ரத்து செய்யலாம்.. அல்லது தொடரலாம்..அவர்கள் எந்த நிலையான அறிவுறுத்தல்களையும் மாற்றவும் ரத்து செய்யவும் முடியும்..

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்கள் பலரும், மின்சாரம் மற்றும் எரிவாயு முதல் இசை மற்றும் திரைப்பட சந்தாக்கள் ஆகியவற்றுக்கு தானியங்கி கட்டண வழிமுறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் இந்த புதிய விதிகள் மில்லியன் கணக்கான பயனர்களுக்கு குழப்பத்திற்கு வழிவகுக்கும். மேலும் OTT தளங்கள் போன்ற டிஜிட்டல் சேவை செயல்பாடுகளில் பணம் செலுத்துவது மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதால் அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது..

 

Tags :

Share via