என்ஜின் பழுது காரணமாக அந்த்யோதயாவிரைவு ரெயில் 40 நிமிடங்கள் நிறுத்தம்...

by Editor / 29-07-2023 11:11:14pm
என்ஜின் பழுது காரணமாக அந்த்யோதயாவிரைவு ரெயில் 40 நிமிடங்கள் நிறுத்தம்...

நாகர்கோவில் - சென்னை தாம்பரம் இடையே அந்த்யோதயா விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல நாகர்கோவில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு அந்த்யோதயா விரைவு ரெயில் பயணிகளுடன் கிளம்பி சென்ற நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்தபோது திடீரென ரயில் என்ஜின் பழுது காரணமாக அந்த்யோதயா விரைவு ரெயில் நிறுத்தப்பட்டது. என்ஜின் பழுது நீக்கப்பட்டு 40 நிமிடங்கள் தாமதமாக கிளம்பி சென்றது.

வழக்கமாக அந்த்யோதயா விரைவு ரெயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்திற்கு 6 மணிக்கு வருவது வழக்கம். ஆனால் இன்றைக்கு 6:25 மணிக்கு தான் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து ரயில் இன்ஜின் பழுது ஏற்பட்டதால்  பழுது சரி செய்யப்பட்டு  40 நிமிடங்கள் தாமதமாக 7.05மணிக்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo