நெய்வேலி விவகாரத்தில் அரசு மக்கள் பக்கம் நிற்க வேண்டும். பெ.மணியரசன் பேட்டி

by Editor / 29-07-2023 11:08:05pm
நெய்வேலி விவகாரத்தில் அரசு மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.  பெ.மணியரசன் பேட்டி

திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழர் தேசிய கழகம் சார்பில் தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசனுக்கு 75 பெருமகிழ்வு விழா நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணியரசன் நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

நெய்வேலி நிலக்கரி மற்றும் அனல் மின் நிலைய நிறுவனம் புதிது புதிதாக தமிழர்களுடைய நிலங்களை கைப்பற்றி கிராமங்களை காலி செய்து வருகிறது.இப்பொழுது ஒரு மூன்று நான்கு கிராமங்களை காலி செய்யக்கூடிய ஏற்பாட்டில் இருக்கிறது.நேற்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.நிலத்தை இனிமேல் கையகப்படுத்தக் கூடாது கொடுக்கக்கூடாது கொடுக்க மாட்டோம் விவசாயம் தான் முக்கியம் என்கிற நோக்கம் அந்த கோரிக்கை சரியானது.

நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரம் எல்லாம் தமிழ்நாட்டுக்கு அல்ல.பத்துல ஒரு பங்கு தான் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிறது,மற்ற மாநிலங்களுக்கு இந்த மின்சாரம் செல்கிறது.மிகையான தொழில் பெருக்கமும் இந்த மாதிரி வந்து விவசாயத்தை அழிக்கிறது கிராமங்களை அழிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.தமிழக அரசு நெய்வேலி விவகாரத்தில் மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி இரண்டு மாதங்கள் கழித்து இந்த பணிகளை மேற்கொண்டால் என்ன விளைநிலங்களில் நெற்பயிற்களை அழித்து தான் பணிகளை மேற்கொள்ள வேண்டுமா என்று கூறி நான் கண்ணீர் வடிக்கிறேன் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் தங்கம் தென்னரசு மிரட்டும் தொணியில் அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்,அரச வன்முறை உங்களை அச்சுறுத்தும் என்கிற அடிப்படையில் அதில் குறிப்பிடுகிறார்.இது மிரட்டும் தொணியில் உள்ளது எனவே கட்சிப் பாகுபாடு  இன்றி நெய்வேலி விவகாரத்திற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

அண்ணாமலை என் மண் என் மக்கள் என்று யாரை சொல்கிறார் என்று தெரியவில்லை.அவரது மண் பாரத மாதா,என் மண் என் மக்கள் என்றால் நெய்வேலிக்கு எதிராக போராட வேண்டியதுதானே இந்தி திணிப்புக்கு எதிராக போராட வேண்டியதுதானே அரசியலில் இதெல்லாம் ஒரு நடிப்பு.இப்போது ஒரு நடிகர் வந்திருக்கிறார் அண்ணாமலை என்று எல்லாம் வாக்கு வேட்டைக்காக மட்டுமே என்று அவர் கூறினார்.

மணிப்பூரில் வன்முறை உருவாவதற்கு காரணமே பாஜக தான் பெரும்பான்மை இனமான மெய்தி இனத்தில் இந்துக்கள் இருக்கிறார்கள். சிறுபான்மையினமான குக்கி இனத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.இரண்டு இனத்திலும் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் இருவரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின இன மக்களுக்கான சலுகைகளை பெற்று தருவோம் என்று கூறி மெய்தி இன மக்களின் வாக்குகளை பெற்று தான் மணிப்பூரில் பாஜக அரசமைத்து இருக்கிறது.இந்த கலவரத்துக்கு காரணமே பாஜக தான் என்று அவர் கூறினார்.நாடாளுமன்றம் என்கிற குளிர்சாதன கொட்டகையில் இருந்து கொண்டு மணிப்பூர் கலவரத்திற்காக கொக்கரிக்கக் கூடாது.அங்கிருந்து பேசும் திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஏன் மணிப்பூர் மக்களுக்காக தெருவில் இறங்கி போராடவில்லை மோடி பேசி மோடி பேசு என்று சொல்வதால் என்ன பயன்.விவசாயிகள் போராட்டம் நடத்தி மோடியை பேச வைக்கவில்லையா என்று கூறினார்.

 

Tags :

Share via