திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி, எம்.பி. துரை வைகோ பிரச்சாரம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார், அமைச்சர் முத்துசாமி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மாதவாவீதி மாரிமுத்து வீதி விவிசி ஆர் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்,
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் முத்துசாமி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோருக்கு அப்பகுதியில் பெண்கள் திரளானோர் கலந்து கொண்டு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்...
தொடர்ந்து வீடு வீடாக சென்று இந்திய கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக துரை வைகோ மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு சேகரிப்பின் போது மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு துரை வைகோ மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் சால்வை அணிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
Tags : திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி, எம்.பி. துரை வைகோ பிரச்சாரம்.