மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்கு அதிகரிப்பு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கிற்கு மேல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலை, 35 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு புதியதாக 6,000 மாணவர்கள் சேர்ந்த நிலையில் தற்போது இதுவரை 15,618 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.
Tags :