நேருக்கு நேர் மோதிய ரயில்கள்..ரயில் இன்ஜின்கள் தீப்பிடித்தன..

by Editor / 19-04-2023 06:04:08pm
நேருக்கு நேர் மோதிய ரயில்கள்..ரயில் இன்ஜின்கள் தீப்பிடித்தன..

மத்தியபிரதேசம் சிங்பூர் ரயில் நிலையம் அருகே இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ரயில் இன்ஜின்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் காயமடைந்ததோடு, இரண்டு ரயில்வே ஊழியர்களும் இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். சரக்கு ரயில்கள் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories