இலவசத்தை ஊக்கப்படுத்தும் காங்கிரஸ் - பிரதமர் மோடி

by Staff / 06-09-2023 04:52:49pm
இலவசத்தை ஊக்கப்படுத்தும் காங்கிரஸ் - பிரதமர் மோடி

பொருளாதாரத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், பொறுப்பற்ற நிதி கொள்கைகள், பொருளாதார மட்டுமின்றி சமூகத்தையும் சிதைக்கிறது. இதனால் ஏழைகள் அதிக விலை கொடுக்கிறார்கள். மாநில தேர்தல்களில் இலவச கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் காங்கிரஸ், இலவச கலாச்சாரம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்த நினைக்கும் காங்கிரஸ். தேர்தல்களில் நடைமுறைக்கு ஒத்து வராத வாக்குறுதிகளை காங்கிரஸ் அளிக்கிறது. காங்கிரஸின் உத்தரவாதங்கள், நாட்டை திவால் ஆக்கவும் பொருளாதாரத்தை மூழ்கடிக்கும் வகையிலும் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via