அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்தார்.

டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய நிதியமைச்சருடனான இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டியசரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத்தொகை ரூ.13,504.74 கோடி ரூபாய் உள்பட 20,860.40 கோடியை உடனே விடுவிக்க கோரி நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.
Tags : Tamil Nadu Chief Minister Mukha Stalin met Minister Nirmala Sitharaman.