கும்பக்கரை அருவியில் நீர் வரத்துசீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி;

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், பாம்பார்புரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கன மழையால் நண்பகல் 12 மணி முதல் அருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவானதால் சுற்றுலா பயணிகள் அனைவரையும் வனத்துறையினர் வெளியேற்றி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் யாரையும் குளிக்க அனுமதிக்காமல் தடை விதித்தனர். இந்த நிலையில் அருவிக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிப்பதாக வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர்.
மேலும் தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் காலை முதல் ஆர்ப்பரித்து கொட்டி வரும் அருவி நீரில் குளித்து சென்றவண்ணம் இருந்தனர்.
Tags : கும்பக்கரை அருவியில் நீர் வரத்துசீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி;