அண்ணனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக வெட்டிக் கொன்ற தம்பி உள்பட 6 பேர் கைது

கடலூர் மாவட்டம் திருப்பத்திரிப்புலியூர் அருகே அன்னை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த தம்பி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.கம்மியா பேட்டையை சேர்ந்த கருப்பு என்கிற கண்ணன் என்ற ரவுடி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டியும் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடந்த விசாரணையில் கடந்த 2002ஆம் ஆண்டு புதுநகரை சேர்ந்த காமராஜ் என்பவரை கண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளது தெரியவந்தது அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
Tags :