மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதி

by Staff / 17-02-2023 01:33:13pm
மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதி என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். பட்ஜெட் உரையை தாக்கல் செய்த முதலமைச்சர், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும் என்றும், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேகதாது திட்டம், கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகாலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், காவிரி ஆற்றின் குறுக்கே, சிவசமுத்திரம் அருவியின் அருகே அணையைக் கட்டி, நீர்மின் நிலையம் தொடங்க கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.

 

Tags :

Share via

More stories