கூலி தொழிலாளி தற்கொலை

by Staff / 05-08-2023 01:20:50pm
கூலி தொழிலாளி தற்கொலை

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகேயுள்ள தண்ணீர்பந்தல்பாளையம் புலேரிக்காடு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் மாரியப்பன், 29. கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு ராசிகா, 23 என்ற மனைவியும், 2 வயது மகனும் உள்ளனர்.ஜோதிடம் பார்த்து நேரம் சரியில்லை என்றதால், ஓரியாகணவனூர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தனர்.கடன் பிரச்சனையால், மாரியப்பனுக்கும், ராசிகாவுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி கொடுத்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo