ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 74.13% வாக்கு பதிவு.

by Editor / 26-11-2023 09:50:21am
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 74.13% வாக்கு பதிவு.

ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 74.13% வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு (கரன்பூர் தொகுதியை தவிர்த்து) நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 51,000க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் 5.25 கோடி மக்கள் வாக்கு செலுத்தி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். அதன்படி 74.13% வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Tags : ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 74.13% வாக்கு பதிவு.

Share via

More stories

Logo