முதல்வர் பாராட்டிய மாற்றுத்திறனாளியை தூக்கு கயிறு கொண்டு போராட வைத்த அதிகாரிகள்

by Staff / 13-04-2023 04:31:08pm
முதல்வர் பாராட்டிய மாற்றுத்திறனாளியை தூக்கு கயிறு கொண்டு போராட வைத்த அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது. ஆனால் இதுவரை அவர்கள் எந்த இடம் என்று அளந்து கொடுக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை தாலுகா அலுவலகத்தில் முறையீடும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து தாலுகா அலுவலகத்தில் கேட்க சென்றால் மாற்று திறனாளிகளை அங்குள்ள அதிகாரிகள் அவதூறாக பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச பட்டாவிற்கு உரிய இடத்தினை அளவீடு செய்து தர வேண்டும், தங்களை அவதூறாக பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு பட்டா மற்றும் தூக்கு கயிறு தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் சுசீலா பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தினை கைவிட்டனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டிக்கு வருகை தந்த போது தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளை பார்த்து பேசியது மட்டுமின்றி, அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்றார். அப்போது அங்கு இருந்த மாற்றுத்திறனாளி சின்னராசுவிடம் கேட்டறிந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் அவரை தட்டிக்கொடுத்து பாராட்டினார் அந்த மாற்றுத் திறனாளிக்கும் தற்போது வரை இடத்தினை அளந்து கொடுக்கவில்லை. முதல்வர் கனி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் நிலையில் இங்குள்ள அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று வேதனையுடன் பதிவு செய்தவுடன்

 

Tags :

Share via