வெள்ளத்தில் மூழ்கிய நாக்பூர் நகரம்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது. நள்ளிரவு முதல் அதிகாலை 5:30 மணி வரை 106 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மத்திய படையினர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட அதிகாரிகள் விடுமுறை அறிவித்துள்ளனர். இதனை அடுத்து நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டது.
Tags :