வருது  வருது லேசான மழை வருது...

by Editor / 21-02-2025 02:11:02pm
வருது  வருது லேசான மழை வருது...

தமிழகத்தில் வரும் 27ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (22-02-2025) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 23 முதல் 26ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 27ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags : வருது  வருது லேசான மழை வருது...

Share via