11 பெண்களுக்கு 10 கோடி ரூபாய் லாட்டரி பரிசு

by Editor / 28-07-2023 11:37:16pm
 11 பெண்களுக்கு 10 கோடி ரூபாய் லாட்டரி பரிசு

கேரளாவைச் சேர்ந்த 11 பெண்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இந்த 11 பெண்கள் அனைவரும் சேர்ந்து ரூ.250க்கு லாட்டரி சீட்டு வாங்கினார்கள். சமீபத்தில் வெளியான லாட்டரி முடிவுகளில் ரூ.10 கோடியை இவர்கள் வென்றனர். பரப்பனங்காடி பேரூராட்சியைச் சேர்ந்த ஹரிதா கர்ம சேனாவைச் சேர்ந்த இந்தப் பெண்கள் மக்காத குப்பைகளைச் சேகரித்து மறுசுழற்சி ஆலைக்கு எடுத்துச் செல்லும் பணியை செய்து வருகின்றனர். இவர்கள் ரூ.10 கோடி மதிப்பிலான மழைக்கால பம்பர் லாட்டரியை வென்றுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo