பெண் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகிதா ஹாதுன் இவர் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களாக மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார் வேலை பார்த்த நிறுவனத்தில் சுதந்திர தினம் கொண்டாட அனைத்து தொழிலாளர்களும் சென்றுள்ளனர். ஆனால் இவர் மட்டும் செல்லவில்லை. இந்த நிலையில் நிறுவனத்திற்கு சொந்தமான விடுதிக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கினார். அதை பார்த்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சென்னிமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சென்னிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :