ஒற்றை யானை தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி பலி

by Staff / 08-05-2022 04:08:19pm
ஒற்றை யானை தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி பலி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் கூலி தொழிலாளி ஒருவர் ஒற்றை யானை தாக்கி உயிரிழந்தார். பவானி எஸ்டேட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த முருகன் என்பவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் கொண்ட உறவினர்கள் எஸ்டேட் பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர் அங்கு ஒற்றை யானை தாக்கி முருகன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

 

Tags :

Share via
Logo