போலீசார் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றும் கடமையை மட்டும் செய்ய வேண்டும்- பா. ஜ. க. இப்ராஹிம்

by Editor / 22-08-2022 10:18:40pm
போலீசார் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றும் கடமையை மட்டும் செய்ய வேண்டும்- பா. ஜ. க. இப்ராஹிம்

மதுரை: தி. மு. க. , அரசின் அராஜகப்போக்கு தொடர்ந்தால் வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவர், '' என, மதுரையில் பா. ஜ. , சிறுபான்மை அணி தேசிய செயலாளர் இப்ராஹிம் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக எழுந்த பிரச்னையில் பா. ஜ. , வினர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரை பா. ஜ. , சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் சந்தித்தார். பின் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பா. ஜ. , வின் வளர்ச்சி பிடிக்காமல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி. மு. க. , அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, போலீசார் மூலம் தினமும் பா. ஜ. வினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மதுரை மக்களை பார்த்து அமைச்சர் தியாகராஜன் இழிவாக பேசினார். இதனால் உணர்ச்சிவசப்பட்டு செயல்பட்டதால் விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. தற்செயலாக நடந்த இச்சம்பவத்தை பூதாகரமாக்கிய தி. மு. க. , அரசு, இதில் தொடர்பில்லாத கட்சியினரை கைது செய்து மிரட்டி வருகிறது. பாதிக்கப்பட்டோருக்கு பா. ஜ. , என்றும் துணை நிற்கும். தி. மு. க. , அரசின் இந்த அராஜகப்போக்கு தொடர்ந்தால், வரும் தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவர். போலீசார் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றும் கடமையை மட்டும் செய்ய வேண்டும். அப்பாவி மக்களை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டால் பா. ஜ. , போராட்டம் நடத்தும். தி. மு. க. , அரசின் அத்துமீறல்களுக்கு அறவழியில் சட்டம் மூலம் நீதி பெறுவோம் என்றார்.

 

Tags :

Share via