நாதகவின் விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கீடு

by Staff / 14-02-2024 11:03:18am
நாதகவின் விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் தற்போது ஆந்திராவில் உள்ள பாரதிய பிரஜா அய்கியதா கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாதகவிற்கு மெழுகுவர்த்தி சின்னம் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றம், 2021 சட்டமன்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த தேர்தலில் நாதக சுமார் 7% வாக்குகளை பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது, கட்சியினர் சின்னத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்து வரும் நிலையில், அந்த சின்னம் வேறு மாநிலத்தில் உள்ள கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்த முறையும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo