ஓடும் காரில் சிறுமி பலாத்காரம்

by Staff / 19-07-2024 01:27:08pm
ஓடும் காரில் சிறுமி பலாத்காரம்

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே மோகனா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞருடன் பழகியுள்ளார். அந்த இளைஞர் மேலும் இரண்டு நண்பர்களுடன் ஒரு காரில் சிறுமியை தேடி வந்தார். அதன்பின், சிறுமியை காரில் ஏற்றிச் சென்று ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோ எடுத்து சிறுமியின் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via