அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவின் தரம், சுவை, அளவு குறித்து முதலமைச்சர், அங்குள்ள பணியாளர்கள், அலுவலர்களிடம் கேட்டறிந்து நேரில் ஆய்வு செய்தார். அதே போல், உணவு தயாரிப்பு முறைகள் குறித்தும், சுகாதாரம் குறித்தும் பார்வையிட்டார். அம்மா உணவகம் திட்டத்தை திமுக அரசு முடக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், முதலமைச்சரே நேரில் ஆய்வு நடத்தினார்.
Tags :