செங்கோட்டை - கொல்லம் ரயில் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் டிசம்பர் 23 முதல் நின்று செல்லும்

by Editor / 22-12-2021 09:30:45pm
செங்கோட்டை - கொல்லம் ரயில் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் டிசம்பர் 23 முதல் நின்று செல்லும்

 செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 23 முதல் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும். செங்கோட்டை - கொல்லம் சிறப்பு ரயில் (06659) மற்றும் கொல்லம் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06660) ஆகியவை ஆரியங்காவு ரயில் நிலையத்திலிருந்து முறையே  மதியம் 12.05 மணிக்கும் மற்றும் மதியம் 01.08 மணிக்குமா புறப்படும்.

மேலும் திண்டுக்கல் - திருச்சி - திண்டுக்கல் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 23 முதல் மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். திண்டுக்கல் - திருச்சி சிறப்பு ரயில் (06498) மற்றும் திருச்சி - திண்டுக்கல் சிறப்பு ரயில் (06499) ஆகியவை சமுத்திரம் ரயில்  நிலையத்திலிருந்து முறையே காலை 07.43 மணிக்கும் மற்றும் மாலை 06.58 மணிக்கும் புறப்படும்.

 

 

Tags :

Share via