பெரிய இராணுவ அழுத்தத்திற்குப் பிறகும் ஈரான் ஏன் இன்னும் சரணடையவில்லை என்று டிரம்ப் கேட்பதாகத் தெரிவித்த ஸ்டீவ் விட்காஃப்,

by Admin / 23-02-2026 07:16:08am
பெரிய இராணுவ அழுத்தத்திற்குப் பிறகும் ஈரான் ஏன் இன்னும் சரணடையவில்லை என்று டிரம்ப் கேட்பதாகத் தெரிவித்த ஸ்டீவ் விட்காஃப்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்,  இவ்வளவு பெரிய இராணுவ அழுத்தத்திற்குப் பிறகும் ஈரான் ஏன் இன்னும் சரணடையவில்லை என்று டிரம்ப் கேட்பதாகத் தெரிவித்தார்.

ஈரான் எல்லைக்கு அருகில் அமெரிக்கா தனது கடற்படை மற்றும் விமானப்படை பலத்தை அதிகரித்து வருகிறது .யூ.எஸ்.எஸ்.ஹெரால்ட்,யூ.எஸ்.எஸ்ஆப்ரகான்லிங்கன் ஆகிய இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் தற்போது அந்தப் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அணுசக்தி விவகாரத்தில் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை எட்ட ஈரானுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை காலக்கெடு விதித்துள்ள டிரம்ப், தவறினால்  இராணுவத் தாக்குதல்கள்நடத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.

 ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் பூஜ்ஜியம் என்ற நிலையில் இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக உள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

 ஈரான் தனது அணுசக்தித் திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறி வரும் அதேவேளையில், தனது இறையாண்மையை விட்டுக் கொடுத்து நிபந்தனையற்ற சரணடைதலை ஏற்கப் போவதில்லை என்று ஈரானின் அதிபர் அயதுல்லா அலி காமேனி  தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories