சங்கரநாராயணர் கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த கோரிக்கை சீமான்

by Staff / 20-08-2024 01:58:51pm
சங்கரநாராயணர் கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த கோரிக்கை சீமான்

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவை முழுவதுமாகத் தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் கண்டனத்திற்குரியது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 1000 ஆண்டுகளுக்கு முன்பு உக்கிரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த மறுப்பது தமிழையும், இனத்தையும் அவமதிக்கும் கொடுஞ்செயல் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via