ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில்  கேஸ் கசிவு : 3 பேர் பலி

by Editor / 11-05-2021 04:17:59pm
ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில்  கேஸ் கசிவு : 3 பேர் பலி

 


ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் கேஸ் கசிவு ஏற்பட்டதால் 3 பேர் பலியாகிய நிலையில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தனியாருக்கு சொந்தமான ரசாயனத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் நிலையில் தொழிற்சாலையில் ரசாயன கேஸ் கசிவு ஏற்பட்டது.
இதனால் அங்கு பணியாற்றி வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தொழிற்சாலையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் ரசாயன கேஸ் கசிவு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories