ஹன்டா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தீவிர தனிமைப்படுத்தல் நடைமுறைகள் .

by Admin / 12-05-2026 10:42:35am
ஹன்டா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தீவிர தனிமைப்படுத்தல் நடைமுறைகள் .

சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தீவிர தனிமைப்படுத்தல் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன:காய்ச்சல், தசைவலி, மற்றும் சோர்வு போன்ற ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தீவிரமாகப் பரிசோதிக்கப்படும்.
 ஹன்டா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்த பயணிகளுக்கு ஆா்டிபிசிஆர்மற்றும் ஆன்டிபாடி பரிசோதனைகள் செய்யப்படும்.ஹன்டா வைரஸின் அடைகாக்கும் காலம் பொதுவாக 1 முதல் 8 வாரங்கள் என்பதால், பயணிகள் குறைந்தபட்சம் 2-3 வாரங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர்.
பயணிகள் அனைவரும் வெளியில் நடமாடாமல் தடுக்க, பிரத்யேக அரசு மருத்துவமனைகள் அல்லது தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்படுவர்.ஹன்டா வைரஸ் முக்கியமாக எலிகளின் கழிவுகள் மூலம் பரவுவதால், கப்பல் முழுவதும் முழுமையாக சுத்திகரிக்கப்படும்.
உடமைகள் அனைத்தும் உயர் வெப்பநிலையில் கிருமி நீக்கம்  செய்யப்பட்ட பிறகே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பணியாளர்கள் மற்றும் பிற பயணிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

 

 

Tags :

Share via

More stories

Logo