.ஒப்பந்த செவிலியர் ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்படும் -மா. சுப்பிரமணியன்
.ஒப்பந்தசெவிலியர் போராட்டம் வாபஸ். சென்னையில் கடந்த ஒரு வாரமாக .ஒப்பந்தசெவிலியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தங்களை நிரந்தரமாக பணியயமர்த்த வேண்டும் என்றும் அரசு ஊழியர்களுக்கு அளிக்கக் கூடிய அனைத்து சலுகைகளும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பணி நிரந்தர கோரிக்கையை வைத்து போராடி வந்தனர்.. இந்நிலையில் , மக்கள் நல்வாழ்த்துகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார் நீண்ட நாட்களாகப் போராடி வந்த ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று, முதற்கட்டமாக 1,000 பேருக்கு பணி வழங்க அரசு முடிவு செய்துள்ளது..எஞ்சியுள்ள சுமார் 7,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப வரும் காலங்களில் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையான மகப்பேறு விடுப்பு போன்ற சலுகைகள் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாகச் செவிலியர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Tags :


















