த.வெ.கநிர்வாகி அஜிதா கட்சி பதவி கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சி
தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதா கட்சி பதவி கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். .தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார் ..ஆனால், அந்த பதவி சாமுவேல்ராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டதாக மிகுந்த அதிருப்தி அடைந்தார். டிசம்பர் 23 அன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை இடத்தில் த.வெ.க தலைவர் விஜயின் காரை வழிமறித்து அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கட்சித் தொண்டர்கள் சிலர் அவரை திமுகவின் கைக்கூலி என்று விமர்சித்து அவதூறுகளை பரப்பியதாக கூறப்படுகிறது .மயக்க நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஏவிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவின் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.
Tags :


















