இன்று இருப்பிடமான அழகர்கோவில் மலையை அடையும் கள்ளழகர்.

அழகர் கோவில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வரும் நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 27) மூன்றுமாவடி வழியாக அதிகாலை 3 மணிக்கு அப்பன்திருப்பதியை அடைந்தார். இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 7 மணிக்கு கள்ளந்திரியை அடையும் அவர்,இன்று காலை 11.30 மணிக்குள் மலையை அடைகிறார்.மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர், மீண்டும் இருப்பிடமான அழகர்கோவில் மலை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார்.
வழி நெடுகிலும் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷத்துடன் அழகரை வரவேற்றவண்ணம் உள்ளனர்.
Tags : இன்று இருப்பிடமான அழகர்கோவில் மலையை அடையும் கள்ளழகர்.