மீண்டும் ஒரு புயல் சின்னம் வானிலை ஆய்வு மையம்-எச்சரிக்கை!

by Editor / 18-11-2022 08:49:27am
மீண்டும் ஒரு புயல் சின்னம் வானிலை ஆய்வு மையம்-எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via