விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கின்றேன்: ஆளுநர் தமிழிசை
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் அதிமானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் இதை தொடந்து வலியுறுத்தி வந்துள்ளேன். நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம் தமிழகத்திற்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றார்கள். ஒரு குடும்பத்தை சார்ந்தவர்கள் தான் தலைவராக இருக்க வேண்டும் என்பதல்ல நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றார்கள், இளைய தலைவர்கள் தேவைப்படுகின்றார்கள் அதனால் விஜய் வந்ததை வரவேற்கின்றேன் இன்னும் நிறைய தலைவர்கள் வரவேண்டும். இல்லா நிலை பட்ஜெட் என்கின்றார் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கெல்லாம் போகின்றார் என்றார். ஒரு மாநிலத்தை சேர்ந்த முதல்வர் அடிக்கடி வெளிநாடு போகும் போது, நாட்டை நிர்வகிக்கும் பிரதமர் முதலீட்டை ஈர்க்க எத்தனை தடவை போக வேண்டும் அதனால் தான் நாட்டின் வளர்ச்சிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்துள்ள சில பிரச்சினைகள் அவர்கள் அச்சத்தோடு இருக்கின்றார்கள் என தமிழிசை தெரிவித்தார்.
Tags :













.jpg)





