காரில் சாய்ந்த சிறுவனை எட்டி உதைத்த இளைஞர்

by Staff / 04-11-2022 01:00:02pm
காரில் சாய்ந்த சிறுவனை எட்டி உதைத்த இளைஞர்

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை அடுத்த தலச்சேரியில் இச்சம்பவம் நடந்துள்ளது. பொன்னயம் பாலத்தை சேர்ந்த ஷிஹ்ஷாத் என்பவர் இந்த கொடூர குற்றத்தை செய்துள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இவர் ராஜஸ்தானை சேர்ந்த கணேஷ் என்ற சிறுவனை எட்டி உதைத்ததில், அவனது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

உதைக்கப்பட்டவுடன் சிறுவன் ஆத்திரமடைவதும் காட்சிகளில் தெளிவாக தெரிகிறது. அந்த வீடியோவில் அருகில் இருந்த ஆட்டோ டிரைவரும் மற்றவர்களும் அவரிடம் விசாரித்தபோது தான் செய்ததை நியாயப்படுத்தி காரில் ஏறினார். இது தொடர்பாக குழந்தைகள் உரிமை ஆணையம் தன் சொந்த முயற்சியில் வழக்கு தொடர்ந்தது.

கேரளாவில் வேலைக்கு வந்த ராஜஸ்தானி குடும்பத்தை சேர்ந்தவன் சிறுவன் கணேஷ். இதில், ஷிஷாத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து டிஐஜி ராகுல் ஆர் நாயர் அறிக்கை கேட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories