44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்

by Editor / 15-07-2022 08:56:59pm
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்

 சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகின்றது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகள் பங்கேற்பதுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். மேலும் அவர் தனது டூவிட்டர் பக்கத்திலும் அந்த விடியோவை வெளியிட்டுள்ளார்.மேலும் அவர்  கூறுகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடருக்கான டீசர் வீடியோவை வெளியிட்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்
 

Tags : Actor Rajinikanth released the teaser of the 44th Chess Olympiad

Share via