மாணவர்களை பார்க்கின்ற பொழுது எனக்கு புதிய எனர்ஜி ஏற்படுகிறது -தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்
சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 10-ம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதற்கு முன்னர் கட்சி தலைவர் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்பொழுது அவர் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களை பார்க்கின்ற பொழுது எனக்கு புதிய எனர்ஜி ஏற்படுகிறது என்றும் மருத்துவம் பொறியியல் மட்டும்தான் சிறந்த படிப்பாக என்று கருதாமல் எந்த துறையாக இருந்தாலும் அதை நீங்கள் தேர்ந்தெடுத்து அதில் முனைப்பு காட்டினால் வெற்றி பெறலாம் என்றும் ஏன் அரசியலில் கூட வெற்றி பெற முடியும் என்றும் இன்று நமது நாட்டிற்கு தலைவர்கள் தான் தேவை என்றும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அரசியல் நிகழ்வுகளை கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என்றும்நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் தலைவர்களாக வர வேண்டும் என்றும்என்று பத்திரிக்கைகளில் ஒரு இதழ் தலைப்பு செய்தியாகவும் இன்னொரு பத்திரிக்கையில் கடைசி செய்தியாக கூட வராமல் கூட இருக்கும் என்றும் மாணவர்கள் அரசியல் செய்திகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் சோசியல் மீடியாவில் நல்லவற்றை தவறாகவும் தவறாகப் போய் நல்லதாகவும் சொல்லக்கூடிய நிலை இருப்பதால் கவனமாக ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்திறமையை காத்துக் கொள்ள வேண்டும் என்று போதை பொருளை அறவே ஒதுக்க வேண்டும் என்றும் தற்காலிக சந்தோசத்திற்காக போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்றும் மாணவர்களையும் போதை பொருளுக்கு எதிரான குழப்பத்தை எழுப்பி சொல்லச் சொன்னார். பின்னர் முதல் மதிப்பெண் பெற்ற கொளத்தூர் மாணவிக்கு பரிசுகள் வழங்கியதோடு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களின் அதிக மதிப்பெண் பெற்ற அதாவது மூன்று இடங்களை மாநில அளவில் பெற்ற மாணவர்களுக்கு வைர மோதிரம், தோடுகளை வழங்கினார்..
Tags :