19 கிலோ கஞ்சாவுடன் ஓடிசா வாலிபர்கள் கைது

by Staff / 05-02-2024 01:45:14pm
19 கிலோ கஞ்சாவுடன் ஓடிசா வாலிபர்கள் கைது

ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கஞ்சா மற்றும் தடை செய்யப் பட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தன்பாத் ரயிலில் எஸ்எஸ்ஐ சுப்ரமணி தலைமையில், போலீசார் ராதாகிருஷ் ணன், சக்திவேல், ஏழுமலை ஆகியோர் காட்பாடி முதல் சேலம் வரை சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சாமல்பட்டி- பொம்மிடி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தபோது, எஸ்3 பெட்டியில் சீட்டுக்கு அடி யில் இருந்த பேக் ஒன்றை சோதனை செய்தனர். அதில் இருந்த 7 பண்டல்களில் சுமார் 19 கிலோகஞ்சா இருந்ததை கண்டு பிடித்தனர்.இதனையடுத்து அதனை கைப்பற்றி போலீசார் நடத் திய விசாரணையில், ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் கடுவா பகுதியைச் சேர்ந்த அனில் லீமா (20) மற்றும் ராக்கி மஜி (20) ஆகியோர் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைய டுத்து இருவரையும் கைது செய்த போலீசார், 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சேலம் ரயில்வே போலீசில் ஒப்படைத் தனர்

 

Tags :

Share via

More stories

Logo