ஈரான் மீது தாக்குதல் நடத்த வளைகுடாவில் அமெரிக்க கடற்படை குவிக்கப்பட்டுள்ளன- ஈரானின் தலைவர் அயதுல்லா அலி காமெனி

by Admin / 02-02-2026 09:29:04am
ஈரான் மீது தாக்குதல் நடத்த வளைகுடாவில் அமெரிக்க கடற்படை குவிக்கப்பட்டுள்ளன- ஈரானின் தலைவர் அயதுல்லா அலி காமெனி

ஈரான் மீது தாக்குதல் நடத்த வளைகுடாவில் அமெரிக்க கடற்படை குவிக்கப்பட்டுள்ள நிலையில்,தாக்குதல் நடத்தப்பட்டால் அது ஒரு பிராந்தியப் போராக மாறும் என்று ஈரானின் தலைவர் அயதுல்லா அலி காமெனி  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

டெஹ்ரானில் நடைபெற்ற கூட்டத்தில் காமெனி ,அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும்" என்று  கூறினார். ஈரான் எந்த நாட்டையும் தாக்க விரும்பவில்லை.  ஆனால், தங்களைத் தாக்குபவர்களுக்கு பலமான பதிலடிகொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 ஈரானின், சமீபத்திய உள்நாட்டுப் போராட்ட ஒடுக்குமுறையைக் காரணம் காட்டி,  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்கில் தனது கடற்படை பலத்தை அதிகரித்துள்ளார். வளைகுடா பகுதியில் தற்போது ஆறு அழிப்பிக் கப்பல்கள், ஒரு விமானம் தாங்கிக் கப்பல்  மற்றும் மூன்று கடலோரப் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

 ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணைத் திறன்கள் தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான அழுத்தங்களை அளித்து வருகிறது. இதற்குப் பதிலடியாக, ஈரான் பிப்ரவரி 1-2 தேதிகளில் ஹார்முஸ் ஜலசந்தியில் நேரடி துப்பாக்கிச் சூடு ராணுவப் பயிற்சிகளை  திட்டமிட்டிருந்தது.பதற்றங்களுக்கு மத்தியிலும், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான், அமெரிக்காவுடன்  பேசி வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார், இந்நிலையில், துருக்கி, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் நடுநிலைபேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

 

Tags :

Share via