தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

by Staff / 15-05-2024 01:18:10pm
தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் இதே பகுதியை சேர்ந்த வீராச்சாமி(60) என்பவருக்கும் செந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள நுழைவாயிலிலுள்ள ஆலையில் உள்ள கழிவு தீக்குச்சிகளை மினி லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வந்தது.இந்த பணியின் போது உராய்வின் காரணமாக தீப்பற்றியது. இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் கழிவு தீக்குச்சிகள் மற்றும் தீக்குச்சிகளை ஏற்ற வந்த மினி லாரி ஆகியவை முழுவதும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.மேலும் இந்த விபத்தில் கீழஒட்டம்பட்டியை சேர்ந்த சரவணக்குமார், சாத்தூர் பகுதியை சேர்ந்த கலைவாணன்(32) ஆகிய இருவரும் லேசான தீ காயமடைந்தனர். இந்த தீ விபத்து இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo