விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த CM விஜய்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “கார் மீது லாரி மோதியதில் தனபால், மேனகா, சினேகா, கனிஷ்கா ஆகியோர் உயிரிழந்தனர். 4 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் சுர்ஜித்துக்கு ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
Tags :



















