அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்ட இடத்தை வி.கே.சசிகலா பார்வையிட்டு ஆறுதல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்டு அந்த ஏழு நபர்கள் பலியான சம்பவம் திருவண்ணாமலை நகரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கடந்த 34 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏழு நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா இன்று அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு பாதிக்கபபட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.மேலும் அவரிடம் பொதுமக்கள் கதறி அழுது தங்களது வேதனைகளை தெரிவித்தனர்.
Tags : அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்ட இடத்தை வி.கே.சசிகலா பார்வையிட்டு ஆறுதல்