சிறுமியை கட்டி வைத்து பலாத்காரம்: 49 ஆண்டுகள் சிறை
திருவனந்தபுரத்தில் 16 வயது சிறுமியை நேரிலும், தொலைபேசியிலும் பலமுறை துன்புறுத்திய ஆரியநாட்டை சேர்ந்த ஷில்பி (27) என்பவர், ஆகஸ்ட் 3, 2021 அன்று காலை சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து கட்டிப்போட்டு பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். சில மாதங்கள் கழித்து வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விரைவு நீதிமன்றம் ஷில்பிக்கு 49 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.86,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
Tags :