தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த இடமளித்துவிடகூடாது: முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்

by Staff / 03-10-2023 05:31:36pm
தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த இடமளித்துவிடகூடாது:  முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று (அக். 3) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்க உரையாக முதல்வர் பேசியது: "தமிழகத்தில் நமது அரசு பொறுப்பேற்று நடைபெறக்கூடிய இந்த இரண்டாவது மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாநாட்டில், உங்கள் அனைவரையும் ஒருசேர சந்திப்பதில் மகிழ்ச்சி. முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 10 அன்று மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மாநாடு நடந்தது. 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுப் பணியை மேற்கொண்ட போதும், மாவட்ட ஆட்சியர்களை, காவல்துறை கண்காணிப்பாளர்களை சந்தித்து இருக்கிறேன். தொடர்ச்சியாக உங்களை சந்தித்து வருகிறேன். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது முதலாவது இலக்கு. இரண்டாவது, பொது அமைதியைக் கெடுக்க நினைப்பவர்களை முழுமையாகத் தடுப்பது. அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும் என்றார்

 

Tags :

Share via

More stories

Logo